திண்டுக்கல்லில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குயூனியன் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் பழனி முத்துமாறன், பொருளாளர் லலிதா முன்னிலை வகித்தனர். மதுரை கோட்ட இணை செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார்.

 பாலிசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பாலிசிகளுக்கு போனசை உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை முற்றிலும் நீக்க வேண்டும்.

பணிக்கொடையை உயர்த்திக் வழங்க வேண்டும். குழுக் காப்பீட்டை உயர்த்திக் கொடுக்க வேண்டும். முகவர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: