வளர்ச்சி பணியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி மத்திய பல்கலைக்கழகம் தேர்வு செய்த மாணவர்கள் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்

திருவாரூர்,செப்.24: நடப்பாண்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் நாளைக்குள் தங்களது மதிப்பெண்களை பதிவு செய்து கொள்ளுமாறு பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டார் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் இயங்கி வரும் மத்திய பல்கலை கழகத்திற்கு 2022-23ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் இந்த மாதம் 11ம் தேதி வரையில் நடத்தப்பட்டு இதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டில் திருவாரூர் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் தங்களது கியூட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை நாளை (25ம் தேதிக்குள்) https://cutncuet.samarth.edu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த பாடப் பிரிவாக எம்.எஸ்.சி இயற்பியல், வேதியல், கணிதம், பயோடெக்னாலஜி மற்றும் எம்.ஏ பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ மியூசிக் ஆகிய பாடப்பிரிவுகளும், இளங்கலை பாடப்பிரிவில் பி.எஸ்.சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பி.பி.ஏ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் அனலாயிஸ்டிக் ஆகிய பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மாணவர் விடுதி சேவையானது முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு தேர்வு கட்டுப்பாட்டாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: