தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் இன்று முதுநிலை பாடப்பிரிவு கலந்தாய்வு

தஞ்சாவூர், செப். 24: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று (24ம் தேதி ) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் தமிழ், ஆங்கிலம், விலங்கியல், புள்ளியியல், விண்ணப்பித்த மாணவியருக்கு துறைவழி பகிரப்பட்டுள்ளது. மேலும் வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், கணினியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல் ஆகிய பாட பிரிவிற்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கு 26ம் தேதி துறை வழி மூலம் பாட பிரிவிற்கான இடஒதுக்கீடு செய்யப்படும் என்று குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: