வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் தேங்கிய நீர் அகற்றம் பொதுமக்கள் பாராட்டு

தஞ்சாவூர் செப். 24: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு காரணமாக தண்ணீர் சாலையில் தேங்கி நின்றதாக தினகரன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பிரச்னையை சரி செய்தனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக 15 நாட்களாக தண்ணீர் வெளியே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சாக்கடை தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் கொசு மற்றும் நோய் ஏற்படும் நிலை இருந்தது. எனவே மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுத்து சாக்கடை தண்ணீர் சாலையில் தேங்கி நிற்காதவாறு வழிவகை செய்யவேண்டும் என தினகரன் செய்திதாளில் கடந்த 21ம் தேதி செய்தி வெளியிட்டதை அடுத்து சரி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள், மாநகராட்சி மற்றும் தினகரனுக்கு பாராட்டு நன்றியும் தெரிவித்தனர்.

Related Stories: