×

கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

கறம்பக்குடி, செப். 24: கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் மணல் அள்ளிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் அள்ளுவதாக கறம்பக்குடி காவல் துறைக்கு வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அக்னி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு வந்த திருமணஞ்சேரி அருகே உள்ள மஞ்சுவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யா பிள்ளை மகன் சக்திவேல் என்பவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து கறம்பக்குடி காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Agni river ,Karambakudi ,
× RELATED கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி