மாநில துப்பாக்கி சுடும் போட்டி புதுகை காவலர்கள் அணி 2வது இடம் பிடித்து சாதனை

புதுக்கோட்டை, செப். 24: சென்னையில் கடந்த 08.9.2022-ம் தேதி முதல் 10.9.2022-ம் தேதி வரை மாநில அளவில் நடைபெற்ற 2022-ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டலம் திருச்சி, சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சுந்தரலிங்கம் தங்கப்பதக்கமும், நகர காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜாராம் பிரிவில் வெண்கல பதக்கமும், வெள்ளனூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ரஞ்சித்குமார், வெண்கல பதக்கமும், பெற்று மத்திய மண்டலம்(திருச்சி) சார்பாக துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, நேரடியாக அழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: