×

கோமல் ஊராட்சியில்முழுநேர அங்காடி கட்டித்தர வேண்டும்

குத்தாலம், செப்.24: கோமல் ஊராட்சியில் முழுநேர அங்காடி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் உள்ளது செம்பியன்கோமல் கிராமம். இக்கிராமத்தில் பகுதி நேர அங்காடியானது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 280க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தப் பகுதி நேர அங்காடி ஆனது ஊரில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாய கூடத்தில் மின்சார வசதியும் இல்லை.
வெளியில் ஒருவர் வீட்டில் இருந்து மின்சாரம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் எங்கள் ஊருக்கு அங்காடி கட்டிடமானது வரவில்லை. எனவே இந்த ஆட்சியிலாவது எங்கள் ஊர் பகுதிநேர அங்காடியை முழு நேர அங்காடியாக மாற்றியும், புதிய கட்டிடம் கட்டித் தருமாறும், துறை சார்ந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு அங்காடி கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Komal panchayat ,
× RELATED குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி...