க.பரமத்தி கடைவீதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தி, செப்.24: க.பரமத்தி ஏடிஎம் மையம் அவ்வப்போது பணம் வரல உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் போவதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் இருந்து வருகிறது. இதன் குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக க.பரமத்திக்கு கடைவீதிக்கு வருகின்றனர். க.பரமத்தி கடைவீதியில் யூனியன் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் அவ்வப்போது பணம் இல்லாமல் போவதுடன் அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் வேறு பகுதி ஏடிஎம் மையத்தினை தேடி வாடிக்கையாளர்கள் பெரிதும் திண்டாடுகின்றனர். க.பரமத்தி, முன்னூர், ஆரியூர், நடந்தை, நெடுங்கூர், குப்பம், அத்திப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள பல ஊர்களில் உள்ள பொதுமக்கள் பணபரி வர்த்தனைக்காக இங்குள்ள வங்கியில் கணக்குகளை வைத்துள்ளனர். இதில் சேமிப்புகணக்கு, நடப்புகணக்கு கணக்குகள் அதிகளவில் உண்டு.

இதேபோல் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் செய்யும்போது, அதன் சம்பள பணம் அவர்களது கணக்கில் தான் சேர்க்கப்படுகிறது.

இதேபோல் தினந்தோறும் நகைக்கடன், வியாபாரம் தொடர்பான பண பரிவர்த்தனைகளுக்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் வங்கிகளை நாடுகின்றனர். க.பரமத்தி கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகிலேயே வங்கி செயல்படுவதால் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் வந்து செல்வதால் பரபரப்பாகவே காணப்படும் நிலை உள்ளது. இதனால் வங்கி செயல்படும் அனைத்து நாள்களிலும் எல்லா வேலைகளுக்குமே நீண்ட வரிசையில் நிற்கின்றனர். வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியால் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிருப்பதால் இதனால் சிலர் ஏடிஎம் எந்திரம் மூலம் பணம் எடுக்கவே பொதுமக்கள் பலரும் விரும்புகின்றனர். வங்கியின் வெளியே உள்ள ஏடிஎம் எந்திரத்திற்கு சென்றால் அங்கு பணம் இல்லை என்ற வாசம் மட்டுமே வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து சில வாடிக்கையாளர்கள் கூறுகையில், க.பரமத்தி கடைவீதியில் யூனியன் வங்கியுடன் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடிவதில்லை. இது தவிர விடுமுறை நாட்களில் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க சென்றால் அங்கு இயந்திரத்தில் பணமில்லை என்று ஏதாவது ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்த குளறுபடிகளை சரிசெய்யவதுடன் இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் ஏடிஎம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: