மணல் குவாரி திறக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார் ஆட்சியரிடம் மனு

விருத்தாசலம், செப். 24: ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், விருத்தாசலம் வட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசு குவாரியை மூடி சுமார் 4 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக விருத்தாசலம் வட்டத்தில் மணல் குவாரி திறக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போத மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, மணிவேல், மாவட்ட செயலாளர் ராமர், வட்டத் தலைவர் வேல்முருகன், செயலாளர் கொளஞ்சி, துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Related Stories: