×

புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 9 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்


நெல்லிக்குப்பம், செப். 24:  நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரவேல் மற்றும் போலீசார் வான்பாக்கம் சோதனை சாவடியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையான கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்படுகிறதா என வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை இட போலீசார் முயன்றனர். அப்போது பைக்கில் வந்தவர்கள் பைக்கை நிறுத்துவது போல வந்து நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர். பைக்கை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பைக்கில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தார்.

 பின்னர் பைக்கில் இருந்த மூட்டைகளை ஆய்வு செய்ததில் மூன்று மூட்டைகளில் 9 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரி மாநிலம் மணமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முத்து (39). மடுகரை பகுதியை சேர்ந்த ஜமால் முகமது மகன் அம்ஜித் கான் (38) என தெரிய வந்தது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து போதை பொருட்களை கடத்திச் சென்று விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, முத்து, அம்ஜித்கான் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கடத்தி வந்த 9 கிலோ போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.         

Tags : Puduvai ,
× RELATED பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது...