ஏரல், சிறுத்தொண்டநல்லூரில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

ஏரல், செப். 23:  ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

 தலைமை வகித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ மாணவிகள் 115 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிப் பேசினார். தலைமை ஆசிரியை விஜிலா மேரி வரவேற்றார். இதில் திமுக வைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், சிறுத்தொண்டநல்லூர் கிளைச் செயலாளர் கொற்கைமாறன், ஏரல் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணிவண்ணன், சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், அணிகளின் துணை அமைப்பாளர்கள் சுபமாரியப்பன், பிரபாகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் வில்சன் வெள்ளையா, பொருளாளர் புஷ்பம் ரமேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் இசை சங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, வட்டாரத் தலைவர்கள் வைகுண்டம் கிழக்கு தாசன், வடக்கு சொரிமுத்து பிரதாபன், ஊடக பிரிவு மாநில தலைவர் முத்துமணி, வைகுண்டம் மரியராஜ், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் பிளஸ்வின், ஏரல் நகரத்தலைவர் பாக்கர் அலி, ஒபிசி தலைவர் பிஸ்மி சுல்தான் நிர்வாகி அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகளுக்கு ஊர்வசி அமிர்தராஜ் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: