மகளிர் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

சிவகங்கை, செப்.23: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்(பொ) இந்திரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை அரசு மகளிர் அரசு கலைக்கல்லூரியில் 2022-2023ம் கல்வியாண்டில் முதுநிலை பாடப்பிரிவு எம்.ஏ(தமிழ், பொருளியல்), எம்.காம், எம்.எஸ்சி(கணிதம், வேதியியல், மனையியல், கணினி அறிவியல்) முதலாமாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. www.tngasapg.in என்ற இணையதள வழியில் விண்ணப்பித்த மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Related Stories: