இடப்பற்றாக்குறையால் அவதி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் பெற்றோர்கள் வேண்டுகோள்

தொண்டி,செப்.23: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. புதிய கட்டிடத்தில் நான்கு வகுப்பறை மட்டுமே உள்ளன. இதில் அனைத்து மாணவ,மாணவிகளையும் வைத்திருப்பதால் கடும் சிரமம் அடைகின்றனர். இடப்பற்றாக்குறையால் நூலகம் மற்றும் ஆய்வு கூடம் கட்டிடத்திலும் மாணவர்களை வைத்து பாடம் எடுக்கின்றனர். சில வகுப்பறையில் மின்விசிறி இல்லாததால் மாணவர்கள் மேலும் சிரமம் அடைகின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். சில பெற்றோர்கள் சான்றிதழை வாங்கி கொண்டு வேறு பள்ளிக்கும் சென்றுள்ளனர்.

Related Stories: