நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வளர்ச்சி திட்ட இணையவழி பயிற்சி

நீடாமங்கலம்,செப்.23: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமவளர்ச்சி திட்டம் குறித்த இணையவழி பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், ஒன்றிய துணை தலைவர் ஞானசேகரன், கூடுதல் ஆணையர் அன்பழகன், வட்டார கல்வி அலுவலர் சம்பத் மற்றும் வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 2023-24ம் ஆண்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்து பயிற்சியில் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

Related Stories: