×

நீடாமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,செப்.23: நீடாமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் ரயில் வேகனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல் வேறு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட நெல் மணிகள் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை அனுப்பப்படுகிறது.

அதே போன்று அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களிலிருந்து அரவை செய்த அரிசிகளும் நீடாமங்கலத்திலிருந்து ரயில் பெட்டிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று மன்னாார்குடி அருகில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு பாமனியிலிருந்து நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 100 லாரிகளில் 1,250 டன் பொதுரக அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 ரயில் பெட்டிகளில் (வேகன்) சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு நாமக்கல் அனுப்பி வைத்தனர்.

Tags : Needamangalam ,Namakkal ,Distribution Scheme ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...