நன்னிலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

நன்னிலம், செப்.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை சிதம்பரம் ஆரூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகன் முருகன் (24), இணையதளம் மூலம் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி சென்று வீடு திரும்ப வில்லை. மாலை நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் மகள் காணவில்லை பதறிய பெற்றோர்கள் பேரளம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் சிதம்பரம் அருகே எலெக்ட்ரிசியன் முருகனோடு இருப்பதை அறிந்து போலீசார் பேரளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்ற முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: