பெண் குழந்தைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.23: பெண் குழந்தைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆய்வின்போது அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கிருந்த மாணவிகளிடம், பெண் குழந்தைகள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அடிக்கடி விடுமுறை எடுக்க கூடாது. உங்களுடன் படிப்பவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால் அதுகுறித்து தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் மாணவர்களாகிய நீங்கள் மாவட்ட ஆட்சியராக, காவல் கண்காணிப்பாளராக, மருத்துவராக, பொறியாளராக வர வேண்டும் எனில் பாடப்புத்தகங்களில் உள்ள கருத்துக்களை நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். தொடர்ந்து குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் சத்துணவு மையத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு சமைத்த புளி சாதத்தை சாப்பிட்டு பார்த்து ஆலோசனைகள் வழங்கினார். அதேபோல் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது டிஆர்ஓ செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.எவரேனும் நம்மிடம் சண்டைக்கு வந்தால் அதனை சமாளிப்பதற்கான ஆற்றல் நம் நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது.

Related Stories: