உழைப்பாளர் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர், செப்.23: அரியலூரில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர்கள் நலச் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூரில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில்இ நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை போலீஸ் டிஎஸ்பி சங்கர்கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கி திருச்சி சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இப்பேரணிக்கு அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து அரியலூர் ஆயிரங்கால் மண்டப பகுதிலுள்ள செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், சங்கத்தின் தேசிய தலைவர் சுரேஷ், மாநில பொருளாளர் ஜெய்சிங், மாநில துணை செய்தி தொடர்பாளர் பிங்கள நாராயணன், மாநில துணை செயலாளர் கார்த்திகேயன், மாநில பேச்சாளர் மேகநாதன், சென்னை மாவட்ட செயலாளர் சமுத்திரம், சேலம் மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் சிவலிங்கம், மாவட்ட நிர்வாகி ராஜராஜன், சமூக ஆர்வலர் எம்.ஆர்.பி விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: