×

முசிறியில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய சார்பு நீதிமன்றம்

முசிறி, செப்,22: முசிறியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென முசிறி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். இது குறித்து முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழக அரசு முசிறியில் சார்பு நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் அளித்து அனுமதி வழங்கியது. இதன் கட்டுமான பணிகள் சுமார் ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைய உள்ளது.

தற்போது நவம்பர் முதல் வாரத்தில் சார்பு நீதிமன்றம் முசிறியில் திறக்கபட உள்ளது. இதற்காக முசிறியில் முன்னர் குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வந்த கட்டிடம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கட்டிட வளாகத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முசிறி மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்கியராஜ் குற்றவியல் நடுவர் ஜெயச்சந்திரன் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நீதிபதி பாபு அந்த கட்டிடத்தை விரைந்து புதுப்பித்து நவம்பர் முதல் வாரத்தில் துவங்கிட ஏதுவாக பணிகளை முடித்து வழங்கிட உத்தரவிட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் சந்திரசேகரன், மூத்த வழக்கறிஞர்கள் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : New Probate Court ,Musiri ,
× RELATED முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை...