×

செம்மறிக்குளத்தில் ரூ.24 லட்சத்தில் பஞ். அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

உடன்குடி, செப். 22:  உடன்குடி யூனியனுக்குட்பட்ட செம்மறிக்குளம் பஞ்சாயத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பீட்டில்  செம்மறிக்குளம் பஞ்சாயத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பஞ். தலைவர் அகஸ்டா  மரியதங்கம் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பாலசிங், பேரூராட்சி  துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி,  பிடிஓக்கள் ஜான்சிராணி, பழனிசாமி, துணை சேர்மன்  மீராசிராசூதீன், பஞ். துணை தலைவர் நாராயணன்  முன்னிலை  வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பஞ். புதிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டில் நாட்டினார். இதில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சீயோன்நகர் முத்துச்செல்வன், மாணவரணி  மாநில துணை செயலாளர் உமரிசங்கர்,  உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட  கவுன்சிலர் ஜெஸிபொன்ராணி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு,  மாவட்ட பிரதிநிதிகள் ராஜபிரபு, மகேஸ்வரன்,  மதன்ராஜ், மணப்பாடு ஜெயபிரகாஷ், ஹீபர், பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர்,   உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிராஜா, மகளிர் தொண்டரணி விஜயா, உடன்குடி நகர  பொருளாளர் தங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், கிளை செயலாளர் மோகன்,  ஒன்றிய பொருளாளர் விஜயன், திமுக நிர்வாகிகள் தினகரன், நோவாகிறிஸ்டோபர்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Semmarikulam ,Minister ,Anitha Radhakrishnan ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...