தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு: வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

தஞ்சாவூர் செப். 22: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் / டான்சிநிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.அப்போது பணிகளை தரமாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர்/ டான்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் விஜயகுமார் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் திட்ட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டுறவு காலனியில் காலை உணவு தயாரிக்கும் பணி நடைபெறுவதையும், தஞ்சாவூர கூட்டுறவு காலனியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், தஞ்சாவூர் மாநகராட்சி அருளாநந்த நகரில் மாநகராட்சி சார்பீல் எஸ்மார்ட் சிட்டி அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும்,

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாச்சாவடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள குளம் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் விஜயகுமார் தலைமையில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், கலைஞர் அனைத்து நிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், என்னும் எழுத்தும் இயக்கம், மக்களை தேடி மருத்துவம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம் நீர்நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதன் குறிந்தும் இக்கூட்டத்தில ஆய்வு அரசால் செய்யப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விஜயகுமார் உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சுகபுதிரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: