×

கோரிக்கை மனுகொடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்: கல்லூரி முதல்வரை கண்டித்து தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை, செப்.22: அரசு தன்னாட்சி பெற்ற கல்லூரியான புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மாணவர்கள் அதிகாரிகளிடம் தொடார்ச்சியாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர், கழிப்பிட வசதிகளையாவது உடனே செய்துதர வலியுறுத்தி கல்லூரி முதல்வர் திருச்செல்வத்தை சந்தித்து மாணவர்கள் மனுக்கொடுத்துள்ளனர். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மிரட்டும் தோனியில் பேசியதோடு மட்டுமல்லாது நான்கு மாணவர்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை பறக்கணித்து முதல்வரைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வருடன் பேச்சுவர்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் மோது தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், இதுபோன்ற தவறு இனிமேல் நடைபெறாது எனவும், அடுத்த 10 தினங்களுக்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்ததாக கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் திரண்டனர்

Tags : Dharna ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா