தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முப்பெரும் விழா

கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா. நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவர் சிவப்பிரியா தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் நடராஜன், வரவேற்பு குழு நிதி காப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாநில மகளிர் அமைப்பாளர் பரமேஸ்வரி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில செயலாளர் சுமதி, துணை பொதுச்செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாநில செயலாளர் ஹேமலதா ஆகியோர், பணி ஓய்வு பெறும் செயலாளர் நடராஜனை வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற மாவட்ட செயலாளர் நடராஜனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா நன்றி கூறினார். விழாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: