மேடும் பள்ளமுமாக காணப்படும் காமராஜ் சாலையை சீரமைக்க கோரிக்கை

கரூர், செப். 22: மேடும் பள்ளமுமாக மிக மோசமான நிலையில் உள்ள காமராஜ் சாலையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மார்க்கெட் பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுலவகம் வழியாக மக்கள் பாதை, லைட்ஹவுஸ் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு முக்கியமான சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. அதிகளவு வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் குறிப்பிட்ட தூரம் மேடும் பள்ளமுமாக சாலை மோசமான நிலையில் உள்ளது.

நடந்து கூட செல்ல முடியாத அளவில் உள்ள இந்த சாலையில் அதிகளவு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே, அனைவரின் நலன் கருதி இந்த சாலையை செப்பனிட வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகரின் மையப்பகுதியில் மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: