சிக்கண்ணா அரசு கல்லூரியில் நாளை இறுதி கலந்தாய்வு

திருப்பூர்,  செப்.22: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி  முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பு  மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே 5 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழ் இலக்கியம் 7 இடங்களுக்கும், ஆங்கில இலக்கியம் 5  இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் 9 இடங்களுக்கும், கணினி அறிவியல் 10  இடங்களுக்கும், இயற்பியல் 4 இடங்களுக்கும், வரலாறு 5 இடங்களுக்கும், கணிதம்  26 இடங்களுக்கும் கலந்தாய்வு நாளை (23ம் தேதி) காலை 10 மணி அளவில்  கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

 இணையவழி மூலம் விண்ணப்பித்த  விண்ணப்பத்தையும், கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட  தரவரிசைக் கடிதத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும், இச்சான்றிதழ்களின்  நகல்கள் இரண்டினையும் கலந்தாய்வின்போது கொண்டு வர வேண்டும். காலியாக  உள்ள இடங்களில் சேர விரும்புவோர் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம். முன்னர்  நடைபெற்ற கலந்தாய்வில் பங்குபெற்று இடம் கிடைக்காதவர்களும், இதுவரை  கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும் இறுதிக் கட்டக் கலந்தாய்வில்  பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: