×

கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை மயிலாடும்பாறை பகுதி மாணவர்களின் நலன்கருதி

வருசநாடு, செப். 22: வருசநாடு பகுதியில் மூலக்கடை, தங்கம்மாள்புரம், தர்மராஜபுரம், முத்தாலம்பாறை, உப்புத்துறை, கடமலைக்குண்டு அய்யனார்புரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து சுமார் 2500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் மயிலாடும்பாறை கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், இப்பகுதிக்கு குறைந்தளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களை, அரசு பஸ் டிரைவர்கள் கண்டக்டர் பஸ்சில் ஏற்றி செல்வதில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும். இது சம்பந்தமாக தேனி மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர், இதுகுறித்து பள்ளி மாணவர்கள்  கூறுகையில், ‘‘ஒவ்வொரு நாளும் அரசு பஸ்சை எங்கள் பகுதியில் நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்வதில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.  எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட போக்குவரத்து நிர்வாகிகள் மற்றும் கலெக்டர் கூடுதல் அரசு பேருந்து வழங்கி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

Tags : Mayiladumpara ,
× RELATED மயிலாடும்பாறை பகுதியில் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்