மன்னர் கல்லூரியில் முதுநிலை பிரிவிற்கு இன்று கலந்தாய்வு

சிவகங்கை, செப்.22:சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2022-2023ம் கல்வியாண்டில் அனைத்து முதுநிலை பாடப்பிரிவு(எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) முதலாமாண்டு கலந்தாய்வு இன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இணைய வழியில் விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உரிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களும் எடுத்து வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ மாணவர்கள் ரூ.1000, எம்.எஸ்சி மாணவர்கள் ரூ.1020, எம்.எஸ்சி கணினி அறிவியல் மாணவர்கள் ரூ.1520 செலுத்த வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் அல்லாத பிற பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் படித்தவர்கள் கூடுதல் கட்டணமாக ரூ.195 சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: