பாலமேடு, சேக்கிபட்டி அரசு பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

மேலூர், செப். 22: மேலூர் அருகே சேக்கிப்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பிரியா பிரபு, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி தலைமை வகித்து மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினர். இதில் கொட்டாம்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, மேற்கு ஒன்றிய பொருளாளர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மூர்த்தி, துணை தலைவர் தென்னரசு, ஊராட்சி செயலாளர் இந்திரஜித், சமூகஆர்வலர் அசாருதீன், சேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மொத்தம் 95 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

*பாலமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோகரவேல் பாண்டியன் தலைமை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், பாலமேடு கிராம பொதுமகாலிங்க சுவாமி மடத்துகமிட்டி நிர்வாகிகள் மலைச்சாமி, பிரபு, ஜோதி தங்கமணி, முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், மதுரை வடக்கு மாவட்ட திமுக அவை தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மொத்தம் 223 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

Related Stories: