திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுகவினர் முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து துண்டு பிரசுரம்

திருமங்கலம், செப். 22: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரையில் சமீபத்தில் துவக்கி வைத்தார். தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் குறித்த துண்டுபிரசுங்கள் அச்சடித்து மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் வீடுகள்தோறும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி தலைமையில், அவை தலைவர் நாகராஜ் முன்னிலையில் தெற்கு மாவட்ட திமுகவினர் முதல்வரின் மைல்கல் திட்டமான காலை உணவு திட்டம் குறித்த துண்டுபிரசுங்களை திருமங்கலத்தில் பஸ்ஸ்டாண்ட், மார்க்கெட் மற்றும் வீடுகள்தோறும் விநியோகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர செயலாளார் தர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன், அணி அமைப்பாளர்கள் கொடிசந்திரசேகர், மதன்குமார், வில்லூர் ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், செல்வம், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர், பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி, நகர நிர்வாகி செல்வம், கவுன்சிலர் திருக்குமார், மங்களகவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: