வத்தலக்குண்டுவில் கைம்பெண்கள் கூட்டமைப்பு கூட்டம்

வத்தலக்குண்டு, செப். 22: வத்தலக்குண்டு வில்தீபம் கைம்பெண்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தீபம் கூட்டமைப்பு தலைவர் ஜெயா தலைமை வகித்தார். தீபம் கைம் பெண்கள் கூட்டமைப்பு செயலாளர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் ஜெயா பேசும்போது ‘‘தமிழக அமைச்சர் கீதா ஜீவன் தமிழக சட்டப்பேரவையில் கைம்பெண்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தும், கைம்பெண்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை 1000ரூபாயை, 1500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

கூட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கைம்பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.

Related Stories: