தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்து முதியவர் தற்கொலை

தூத்துக்குடி, செப். 21: தூத்துக்குடியில் வயிற்றை கத்தியால் கிழித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பையா(67). இவரது இரு மகள்கள் திருமணம் முடிந்து தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். சுப்பையா, மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுப்பையாவின் மனைவி சுந்தரம்மாள் இறந்து விட்டார். இதனால் சுப்பையா வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் சுப்பையா வயிற்றை கத்தியால் கிழித்து குடல் சரிந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். மேலும் அவரது உடலருகே ஒரு கடிதத்தையும், கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். விசாரணையில் அவர் மன உளைச்சலில் இருந்ததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாலும் வயிற்றை கத்தியால் கிழித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: