சாத்தூர் பழைய படந்தால் சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சாத்தூர், செப். 21: சாத்தூரில் பாதாளச்சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள், தெருக்களில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகரில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை திட்டப்பணி நடைபெற்று வந்து தற்போது முடிவடைந்துள்ளது. அதை தொடர்ந்து வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன. நகராட்சியில் உள்ள தெருக்கள், சாலைகளில் தோண்டி வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நகரில் உள்ள பழைய படந்தால் ரோடு, மதுரை பஸ்நிறுத்தம் ரோaடு, சாத்தூர் மெயின்ரோடு, வெள்ளக்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பள்ளங்கள் தோண்டப்பட்டு, பாதாளச்சாக்கடை அமைக்க பைப்புகளை பதித்தனர். இதனால், சாலைகள் குண்டும், குழியுமாகின.

வாகனங்கள், பொதுமக்கள் செல்ல சிரமம் அடைந்தனர். இதனால், சேதமடைந்த தெரு மற்றும் சாலைகளில், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, பாதாளச்சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிவடைந்த தெருக்கள், சாலைகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: