×

நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க சென்னையில் குறைதீர்க்கும் மையம் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்

விருதுநகர், செப். 21: நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க, சென்னை கைத்தறிதுறை ஆணையரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது என விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்: கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது ஆகியவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க, சென்னை கைத்தறி துறை ஆணையரகத்தில், நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு நெசவாளர்கள் கடிதம் மூலம் குறைகளை எழுதி துணை இயக்குநர், முகமை அதிகாரி, குறைதீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், சென்னை-104 என்ற முகவரிக்கு அனுப்பலாம். நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் இணையதள முகவரி < https:/gdp.tn.gov.in/dhl > நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் முகவரி wgrcchennai@gmail.com, நெசவாளர் குறைதீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். போனில் 044-25340518 எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Meganathareddy ,Grievance Redressal Center ,Chennai ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...