தேனியில் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேனி, செப். 21: திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடக்க உள்ளதையடுத்து, தேனியில் தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன் வரவேற்றார். இக்கூட்டத்தில், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 22ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதால், அந்த வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக தேனி வடக்கு மாவட்டத்தில் இருந்து நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிகள் ஒருங்கிணைந்து செல்வது எனவும், இதற்காக இன்று(21ம் தேதி) தேனியில் இருந்து அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை செல்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நகர செயலாளர்கள் தேனி நாராயணபாண்டியன், பெரியகுளம் முகமதுஇலியாஸ், போடி புருசோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் தேனி தெற்கு ரத்தினசபாபதி, போடி கிழக்கு அய்யப்பன், சின்னமனூர் மேற்கு முருகேசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல்.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல்.பாஸ்கரன், பேரூராட்சி சேர்மன்கள் வீரபாண்டி கீதாசசி, பூதிப்புரம் கவியரசு, தென்கரை நாகராஜ், தாமரைக்குளம் பால்பாண்டி, தென்கரை பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: