கமுதி அருகே கருமாரி அம்மன் கோயிலில் புரட்டாசி விழா கொடியேற்றம்

கமுதி, செப்.21:  கமுதி அருகே அபிராமத்தில் உள்ள கருமாரி அம்மன் ஆலய 10ம் ஆண்டு புரட்டாசி பொங்கல், முளைப்பாரி, பூக்குழி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. முன்னதாக காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை விக்னேஷ்வர, பஞ்சகாவிய பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை,காப்பு கட்டுதல்,ஊர் காப்பு கட்டுதலை தொடர்ந்து கருமாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 27ம் தேதி காலையில் 33 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று மதியம் சக்தி கரகம் எடுத்தல், மாலையில் அக்னிச்சட்டி ஆயிரங்கண் பானை,அழகுவேல் பால்குடம், கரும்பாலை தொட்டில் தீர்த்தக்குடம், பூத்தட்டு, சேத்தாண்டிவேடம், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். 28ம் தேதி பொங்கல் வைத்தல், உறியடித்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி நகர்வலம் சென்று கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சியும், 29ம் தேதி அம்மனுக்கு 33 வகையான சிறப்பு அபிஷேக அலங்காரம் சாந்தி பூஜை நடைபெறுகிறது.

Related Stories: