×

சோழவந்தான், டி.கல்லுப்பட்டி, குன்றத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

சோழவந்தான், செப். 21: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், திமுக பேரூர் செயலாளருமான சத்தியபிரகாஷ் தலைமை வகிக்க, பேரூராட்சி துணை தலைவர் லதா கண்ணன், நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை தீபா வரவேற்றார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் ஜெயராமன் 277 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், குருசாமி, சிவா, நிஷா கவுதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, ரேகா வீரபாண்டியன், கார்த்திகா ஞானசேகரன், திமுக நிர்வாகிகள் பெரியகருப்பன், முனியாண்டி, தீர்த்தம், கேபிள் ராஜா, சரவணன், மில்லர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

*டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் முத்துகணேசன் தலைமை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகள் 220 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். *மதுரை மாநகராட்சி சார்பில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமை வகிக்க, 99வது வார்டு கவுன்சிலர் உசிலை சிவா முன்னிலை வகித்தார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் சிவகாமி, உதவி தலைமை ஆசிரியர் தென்றல், உடற்கல்வி ஆசிரியர் பாண்டியகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Cholavanthan ,T.Kallupatti ,Gundam ,
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா