7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மதுரையில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

மதுரை, செப். 21: மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் அண்ணா பஸ்நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்முருகன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் தேவராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, டிஎன்ஆர்டிபிஏ கவுரவ தலைவர் பரமேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் திருவேங்கடராஜ் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் 70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட சந்தா தொகை ரூ.497ஐ ரத்து செய்திட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் தங்கவேலு, சொக்கலிங்கம், ஆதரமிளகி, தினகர் சாமி, மாவட்ட இணை செயலாளர்கள் சந்திரசேகரன், நாராயணன், அடைக்கன், பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Related Stories: