×

கள்ளர் சீரமைப்பு விடுதியில் பகுதிநேர தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்,செப்.21: மதுரை,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மட்டும் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

பதவி காலிப்பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில், இனச்சுழற்சி முறையில் நியமிக்கப்படவுள்ளது. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 28. இதில் ஆண்கள் 18, பெண்கள் 10 ஆகும். பகுதி நேர தூய்மைப் பணியாளர் ஆண், பெண் காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2022 தேதியில் எஸ்.சி,எஸ்.டி 18 முதல் 37 வரையும், பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிஎன்சி 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இந்த தகுதிகளுடன் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளராக தொகுப்பூதியத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்தும் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு, மதுரை 20 என்ற முகவரிக்கு வரும் செப்.30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என இணை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Kallar Renovation Hostel ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...