கருவேப்பம்பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கங்காதரன், மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு, உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சர்க்கரை நோய், உப்பு பரிசோதனை, தொண்டை, தோல் சிகிச்சை, குழந்தை மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவம், காசநோய் பரிசோதனை, எலும்பு சிகிச்சை, சித்தமருத்துவம் போன்ற பல்வேறு வகையிலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில், எஸ்.மாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 926 பேர் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்ற அனைவருக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 48 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும், நிகழ்ச்சியில் 36 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

Related Stories: