×

திருவெறும்பூர்- கல்லணை பிரிவு சாலை சீரமைப்பு

திருவெறும்பூர், செப். 20: திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை பகுதியில் தினகரன் செய்தி எதிரொலியாக சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் அருகே கல்லணை மற்றும் கூத்தைப்பார் பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதியில் சாலை 15 நாட்களுக்கு முன்பு பறிக்கப்பட்டடு மீண்டும் சாலை புதுப்பிக்கப்படாமல் ஜல்லிகள் போடப்பட்டு இருந்தன.

இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருவதுடன் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தினகரன் நாளிதழில் கடந்த 15ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து திருச்சி பொதுப்பணித்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாலையை புதுப்பித்துள்ளர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags : Tiruverumpur ,Kallanai ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...