×

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊராட்சி கூட்டத்தில் நன்றி

திருவாரூர்,செப்.20: திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் தலைமையிலும், துணை தலைவர் கலியபெருமாள், செயலர் லதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னியின் செல்வன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கவுன்சிலர்கள் பலரும் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து தேசிய நிலையில் தமிழக அரசின் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில் மாணவிகள் கல்லூரி படிப்பிற்கு ரூ.1000 வழங்கும் தமிழக முதல்வரின் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் மாணவிகள் அனைவரும் பட்டதாரிகளாக உருவாக உள்ளனர். இது போல் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பயனடைய உள்ளனர். எனவே இந்த திட்டங்களுக்கு மாவட்ட ஊராட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்வது, மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் சமத்துவபுரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்து அதனை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Panchayat ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்