×

தஞ்சாவூர் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கணவருக்கு உதவித்தொகை வழங்கக்கோரி பெண் மனு

தஞ்சாவூர், செப்.20: கணவருக்கு மாற்றுத் திறனாளிக்கான உதவி தொகை வழங்க கோரி தஞ்சாவூர் கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா ஆதிதிராவிடர் தெரு அந்தணக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்.மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மாற்றுத்திறனாளி ராதாகிருஷ்ணன் எந்த வேலையும் செய்யமுடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், உஷா ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் மாற்றுத்திறனாளி. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது.

எனவே எனது அன்றாட வாழ்வாதாரம் மிகவும் சிரமமாக உள்ளது. எனது கணவரை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். நான் 12ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனவே எனக்கு ஏதேனும் ஒரு அரசுத் துறையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது கணவரின் ஒரு கால், ஒரு கை செயலிழந்து விட்டது. எங்கு சென்றாலும் நான்தான் அழைத்து செல்வதாக உள்ளது. எனது 2 குழந்தையுடன் வாழ்வதற்கே வழி இல்லாமல் மிகவும் வறுமையில் உள்ளோம். எனவே எனது கணவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Thanjavur Collector ,
× RELATED வேட்பாளர்களுக்கான 3ம் கட்ட ஒத்திசைவு கூட்டம்