×

கும்பகோணத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநாடு

கும்பகோணம், செப்.20: கும்பகோணம் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை தமிழ்நாடு, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூக்கட்டுவோர் பேரவை தஞ்சை வடக்கு மாவட்ட மாநாடு மாவட்ட அமைப்பாளர் சக்தி செல்விஅம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சூரியனார்கோவில் ஆதீனம் லமகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ல விமூர்த்தானந்தா சுவாமிகள், கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி, சிவபுரம் மத வாயுசித்தர் ராமனுஜ தாசர் ஜீயர் சுவாமிகள், தொழிலதிபர் தர்வேம்பு ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

தொடர்ந்து சூரியனார்கோயில் ஆதீனம் லமகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ல விமூர்த்தானந்தா சுவாமிகள், சிவபுரம் மத வாயுசித்தர் ராமனுஜ தாசர் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். தொழிலதிபர் தர்வேம்பு, கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், விஸ்வஇந்து பரிஷத் இணை செயலாளர் ராமசுப்பு, கோரக்கநாத சுவாமிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி நிருபர்களிடம் கூறியது: கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஓய்வு பெறாத பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் ரூ.2ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏழை எளிய பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வாக்கினை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. தற்போது கிராமக்கோயில் பூஜாரிக்கு ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் பேருக்கு என்று அறிவித்தனர். தற்போது இதில் பலர் உயிரிழந்துவிட்ட நிலையில் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று என்று கூறினார்.

Tags : Village Temple Pujaris Assembly Conference ,Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...