கும்பகோணத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

கும்பகோணம், செப்.20: கும்பகோணத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ஆலோசனைக் கூட்டம் தாராசுரம் அனுசியா மஹாலில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன் தாராசுரம் பேரூராட்சி செயலாளர் திமுக சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை 3,000 ரூபாய், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதம், தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும் கும்பகோணம், செப்.20: கும்பகோணம் கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தஞ்சையில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தோடு இணைக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகளின் கல்வித்தரம் பின்னடைவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும், சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகளை நேரடியாக கவனம் செலுத்தி நிர்வகிக்கவும், மாணவர்கள் கல்வித்தரம் மேம்பட வசதியாகவும், கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் கும்பகோணம் கல்வி மாவட்டம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியின் கல்வித்தரமானது உயர்ந்து வளர்ச்சி பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலேயே கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் தான் அதிக மாணவர்கள் உள்ளனர். இப்பகுதியில் பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கும்பகோணம் கல்வி மாவட்டம் கடந்த காலங்களில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளது. ஆகவே, மாணவ மாணவிகள் நலன் கருதியும், இப்பகுதியின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தஞ்சாவூரில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தோடு இணைக்கப்படும் என்ற அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் , கும்பகோணம் கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: