கும்பகோணம் தொலைதொடர்பு ஆலோசனைக்குழு கூட்டம்

கும்பகோணம், செப்.20: காவிரி நதிநீர் படுகை கும்பகோணம் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் முதலாவது தொலைபேசி ஆலோசனை குழு கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியின் கூட்டரங்கத்தில் நேற்று பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும், தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு தலைவருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தொலைபேசி ஆலோசனைக் குழு துணைத் தலைவர் எம்.பி கல்யாணசுந்தரம் மற்றும்

மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். துணை பொது மேலாளர் ராஜகுமார் அனைவரையும் வரவேற்றார். மேலும், பிஎஸ்என்எல் கும்பகோணம் வழங்கி வரும் பல்வேறு சேவைகள், அதன் கட்டண விபரங்கள் மற்றும் தொலைபேசி கட்டமைப்புகள் பற்றிய விளக்கங்களை எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் தொலைபேசி மற்றும் செல் சேவைகளை மேம்படுத்துமாறும், குறிப்பாக அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் இ-சேவை மையங்களில் சில பகுதிகளில் இணைய சேவை பழுதின் காரணமாக செயல்படாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள சேவைகள் வழங்கப்படுவதால் அனைத்து இ-சேவை மையங்களும் தடையின்றி செயல்படுவதை பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதிசெய்யவேண்டும் என கேட்டுக் கொண்டும், செல்போன் கோபுரங்களை பராமரித்து தடையில்லா செல் சிக்னல்கள் அனைத்து இடங்களிலும் வழங்க வேண்டும் எனவும், மேலும் கஜாபுயலின் காரணமாக சாய்ந்து போன செல்கோபுரங்களை மீண்டும் புனரமைத்து சேவைகளை வழங்க வேண்டும் எனவும், வங்கி கிளைகளுக்கான இணைய சேவையினை மேம்படுத்துமாறும் எம்.பிக்கள் கல்யாணசுந்தரம் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடாகோவி செழியன், கும்பகோணம் மாநகராட்சி துணைமேயர் சு.ப.தமிழழகன், ஆலோசனைக்குழு தொலைபேசி உறுப்பினர்கள் கோவி.அய்யாராசு, பிரபாகரன், சுப்புராயன்,கண்ணன், மனோகரன் மற்றும்செந்தில்குமார் ஆகியோர்கலந்துகொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கினர். பொதுமேலாளர் பால சந்திரசேனா மேற்கண்டோர்வழங்கிய ஆலோசனைகளை ஏற்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும், காரைக்காலில் 4ஜி சேவை வழங்குவற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம், பகுதிகளில் அடுத்தக் கட்டமாக 4ஜிசேவை வழங்கப்படும்மற்றும் அக்கரைப்பேட்டை, திருமலைராஜபுரம் கிராமங்களில் 4ஜி சேவைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். முடிவில் துணை பொது மேலாளர் (நெட்வொர்க்) சிவசங்கரன் பிஎஸ்என்எல் சார்பாக நன்றி கூறினார்.

Related Stories: