பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது நடமாடும் நியாயவிலைக்கடை

பெரம்பலூர்,செப்.20: பெரம்பலூர் மாவட்டத்தில் 2வது நடமாடும் நியாய விலைக் கடை. சா.குடிக்காடு கிராம த்தில் தமிழ்நாடு போக்குவ ரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் எனும் கிராம த்தில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், கடம்பூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடை மூலம் மாதத்திற்கு 2முறை ஆட்டோ மூலமாக அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அரசு வழங்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட சா.குடிக்காடு கிராமத்தில் 280 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள் ள சாத்தனூர் கிராமத்திற்கு சென்று உணவுப்பொருட்களை மிகுந்த சிரமத்துடன் வாங்கி வந்தனர். பொதும க்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, சா.குடிக்காடு கிராமத்தில் உள்ள 280 குடும்ப அட்டை தாரர்கள் பயன் பெறும் வகையில், உணவுப்பொருட்களை நான்கு சக்கர வாக னத்தில் (ஆட்டோ) மூலம் கொண்டு சென்று, மாதத்திற்கு இரண்டுமுறை பொது மக்களுக்கு வழங்கிடும் வ கையில் நடமாடும் நியாய விலைக்கடை துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மா வட்டத்தில் இரண்டாவது நடமாடும் நியாய விலைக்கடையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டக் கலெக்டர் ஸ்ரீவெங்கட் பிரியா முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, கூட்டுறவு சங்கங்களி ன் மண்டல இணைப்பதிவாளர் கீதா சங்கரி, துணை ப்பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டித்துரை, ஆலத்தூர் வட்டார வளர்ச்சித்துறைஅலுவலர்கள் முரளி, இமயவரம்பன், தாசில்தார் முத்துக்குமார், கொளக்காநத்தம் ஊராட்சிமன்றத்தலைவர் ராகவன்,ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: