முள்ளக்காடு அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நிவாரணம் வழங்கல்

ஸ்பிக்நகர், செப். 20: முள்ளக்காடு அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஸ்பிக்நகர் பகுதி திமுக சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கியம்மாள், ஜான்சிராணி, ஜெனிடா ஆகியோரின் வீடுகள், தீ விபத்தில் சேதமடைந்தது. இதையறிந்த திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட குடும்பத்திருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கும்படி ஸ்பிக்நகர் திமுக பகுதி செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஸ்பிக்நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர் தலைமையில் திமுகவினர்,

தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு நிவாரண தொகை, சேலை, காய்கறிகள், அரிசி வழங்கப்பட்டது. மேலும் தற்போது வழங்கப்பட்ட நிவாரணம், கட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது ஆதிதிராவிடர் மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி ஆனந்த், வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், கருப்பசாமி, மைக்கேல், வசந்தி, மாவட்ட பிரதிநிதி அந்தோணிராஜ், இளைஞரணி பிரசாந்த், பால்பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: