×

தலைஞாயிறு அருகே கூரை வீடு தீயில் எரிந்து சேதம் தையாபிள்ளை சேத்தி பகுதிக்கு தடையில்லா குடிதண்ணீர் வழங்க கோரிக்கை

நாகப்பட்டினம், செப்.20: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கீழ்வேளூர் தாலுகா வடகரை ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு:வடகரை பஞ்சாயத்து தையாபிள்ளை சேத்தி பகுதியில் குடிநீர் பைப்புகள் இல்லை. இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பெருங்கடம்பனூர் பகுதியில் உள்ள அடிபம்பில் தண்ணீர் பிடிக்க வேண்டி நிலை உள்ளது. இந்த அடிப்பம்பில் வருடத்திற்கு 5 மாதம் மட்டுமே நல்ல தண்ணீர் வரும். மற்ற நாட்கள் உப்பு நீராக மாறிவிடும். இதனால் குடிதண்ணீர் இல்லாமல் எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

எனவே எங்கள் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் குழாய்கள் அமைத்து தடையில்லாமல் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் அருகே பாலையூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொடுத்த மனுவில், பாலையூர், பெருங்கடம்பனூர், செல்லூர், பேத்தி வடக்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கி விட்டன. அறுவடை செய்த நெல்லை வெளியில் வைத்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பன்றிகள் அதிக அளவில் சுற்றி தெரிவதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Tags : Thaiyapillai Sethi ,Thalaignai ,
× RELATED நாகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!