வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், செப். 20: அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் பேசியதாவது:  திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம்-2009 சட்டப்பிரிவு 199 (ஏ)-ன்படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. ஆகவே, மாணவர்களாகி நீங்கள் வாகனங்களை இயக்கக்கூடாது. உங்களை போன்ற மற்ற மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் லட்சுமி நாராயணன், பள்ளி முதல்வர் கணேஷ், கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்ஷா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories: