புதிரை வண்ணார் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

விருதுநகர், செப். 20: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் அளித்த மனுவில், ‘தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள புதிரை வண்ணார் சமுதாயத்தை கடந்த 2009ல் கலைஞர் ஆட்சியில் புதிரை வண்ணார் நலவாரியம் அமல்படுத்தி நடைமுறையில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அனைத்து நலவாரியங்களும் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிரைவண்ணார் நலவாரியத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எந்த மாவட்டத்திலும் புதிரை வண்ணார் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதிரை வண்ணார் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: